தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்தி பாலாஜி, மதச்சார்பின்மைக்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் விதமாகவும் பேசியதாக தமிழக எதிர்க்கட்சிகள், அமைச்சருக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை கண்டித்தும் தமுமுக சார்பில் 100க்கும் மேற்பட்டோர் பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.
பின்னர் அவர்கள், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.