91
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த நபர், சீனாவின் ஷாங்காய் நகரில் உணவகம் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். சீனாவில் கொரானா வைரஸ் பரவத் தொடங்கியதை அடுத்து, கடந்த 31ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
நீடாமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.