மதுக்கூர் இந்திரா நகர் முதல் சிலம்பை காலனி, இடையக்காடு, அர் ரஹ்மான் பள்ளி செல்லும் சாலைகள் கடந்த 45 நாட்களுக்கு முன்பு சேதப்படுத்தப்பட்டு இன்றுவரை சரி செய்யப்படாமல் இருந்து வந்தது. இதனை அறிந்த SDPI கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று மனு கொடுத்தும் எந்த வித வேலையும் தொடங்காமல் கிடந்தது. அதனை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேரூராட்சி உள்ளிருப்பு போராட்டம் நாளை (06.02.2020) நடைபெறும் என்று மதுக்கூர் SDPIநகர நிர்வாகம் அறிவிப்பு செய்தது.
இதனை தொடர்ந்து இன்று சாலையிலை சீர் செய்யும் பணியை (05.06.2020) மதுக்கூர் பேரூராட்சி நிர்வாகம் தொடங்கியது .
சாலை சீர்செய்யும் பணியை SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் M.முகம்மது ரஹீஸ், நகர தலைவர் T.J.மாப்பிள்ளை தம்பி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
நாளை அறிவித்த உள்ளிருப்பு போராட்டம் ரத்து செய்யப்படுகிறது. அத்துடன் பிரச்சனையினை அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்ல முழு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும், எங்களின் கோரிக்கையை ஏற்று சாலையினை சீர் செய்யும் பணியை தொடங்கிய பேரூராட்சி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரித்துக்கொள்கிறேன்.
இவண்
T.J.மாப்பிள்ளை தம்பி
நகர தலைவர்
மதுக்கூர்