தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை ச் சேர்ந்த காதர் முகைதீன் அவர்களின் மகன் தப்ரே ஆலம் வயது ( 30 ) அவர் விரைவாக சைக்கிள் ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இவர் 10,000 கி.மீ. தூரம் கடந்து சாதனை நிகழ்த்தி பல பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்..!!!
உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை அதிராம்பட்டினத்தில் இருந்து திருச்சி, சிதம்பரம், மயிலாடுதுறை, சேத்தியாத்தோப்பு, இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு ஊர்களுக்கு சென்று திரும்பி இதுவரையில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலையைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
நமது ஊரைச்சேர்ந்த ஒரு இளைஞர் இது போன்ற தொலை தூர சாதனை படைத்து வரும் இவரின் ஆர்வத்தைக் கண்டு இவர் மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாயக TIYA நிர்வாகிகள் வைத்த கோரிக்கையை ஏற்று அமீரக TIYA இவருக்கு ரூபாய் 18,500 மதிப்பில் ஒரு ரேஸ் சைக்கிளை இவருக்கு பரிசாக வழங்கியுள்ளது.