Home » காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு !

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு !

0 comment

சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். தமிழகத்தில் திருச்சி, திருவண்ணாமலை மற்றும் சேலத்தில் மூன்று கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

காவிரி டெல்டா விவசாயிகளின் மனக்குமுறல்களை உணர்ந்து, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக” மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து வேளாண் மண்டலங்களை பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டுவரப்படும் என்றும் உறுதியளித்தார். 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டுவந்ததே திமுகதான் என்றும் குற்றம்சாட்டிய முதல்வர் பழனிசாமி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று உறுதிபடக் கூறினார். 
 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter