அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் மதுரை தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியன இணைந்து நடத்திய மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று சனிக்கிழமை காலை முதல் மதியம் வரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவராக தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலையின் கிளை மருத்துவர் Dr. M. ஜெயலட்சுமி B.A.M.S பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.
இம்மருத்துவ முகாமில் ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.