குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை தடியடி நடத்தியது. இதில் பெண்கள் உள்ளிட்ட பலர் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அதன் ஒரு பகுதியாக இன்று அதிராம்பட்டினத்தில் காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது வண்ணாரப்பேட்டையில் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என முழக்கமிட்டனர்.
மேலும் அதிரையின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியும் சென்றனர். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை அமல்படுத்திய பாஜக அரசிற்கு எதிராகவும் பள்ளி மாணவர்கள் கோஷங்களும் எழுப்பினர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்துவது தமிழகத்தில் இதுவே முதல் முறை என கூறப்பிடுதிறது.



