மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், CAA, NRC, NPR ஆகிய சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழக அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரியும் அதிரையில் SDPI கட்சியின் சார்பில் மாபெரும் ஒற்றை கோரிக்கை மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
இந்த ஒற்றை கோரிக்கை மக்கள் திரள் போராட்டத்தில் ஏரிபுறக்கரை வார்டு உறுப்பைனர் அஹமது Msc வரவேற்புரை ஆற்றினார். SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் L. அஸ்கர் மற்றும் SDPI தஞ்சை தெற்கு மாவட்ட ஊடக பிரிவு தலைவர் H. முஹம்மது அசாருதீன் BE ஆகியோர் முன்னிலை வகித்தனர். SDPI கட்சியின் மாவட்ட தலைவர் அதிரை N. முஹம்மது புஹாரி MBA, SDPI கட்சி மாநில செயலாளர் வழக்கறிஞர் N. சஃபியா, வழக்கறிஞர் முஹம்மது தம்பி ஆகியோர் கண்டன எழுச்சியுரை ஆற்றினர். இறுதியாக SDPI அதிரை நகர செயலாளர் NMS. ஷாஃபிர் அஹமது நன்றியுறை கூறினார்.
முன்னதாக அதிரை தக்வா பள்ளியில் இருந்து பழைய போஸ்ட் ஆஃபீஸ் சாலை வழியாக பேருந்து நிலையம் வரை கண்டன பேரணி நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.







