31
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை தடியடி நடத்தியது. இதில் பெண்கள் உள்ளிட்ட பலர் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அதன் ஒரு பகுதியாக இன்று மாலை கிருஷ்ணாஜிப்பட்டினம் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், CAA NRC NPR சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.