குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறகோரியும், NRC NPR ஐ அமல்படுத்தக்கூடாது என கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
அதே கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களும் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக இன்று 43வது நாளாக அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது CAA, NRC, NPR சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும், வண்ணாரப்பேட்டையில் அமைதி வழியில் போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசை கண்டித்தும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டனர்.