குடியுரிமை கருப்புச் சட்டங்களுக்கு எதிராகவும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் தொடர் இருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று 7வது நாளாக நடைபெற்று வரும் இந்த தொடர் இருப்பு போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.