56
அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி செய்கு நஸ்ருதீன் வலியுல்லா அவர்களின் கந்தூரி விழா ஆண்டுதோறும் ரஜப் மாதம் முதல் பத்தில் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இம்மாதம் 25ஆம் தேதி அன்று கொடி ஊர்வலம் நடைபெறும் என எதிர்பார்க்கபட்டது.
இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடே கொந்தளித்துள்ள நிலையில், இவ்வாண்டு கொடி ஊர்வலம் இல்லை என கந்தூரி கமிட்டி அறிவித்துள்ளது.
இதனை அதிரையின் அனைத்து ஜமாத்தினர்களும் வரவேற்று உள்ளனர்.