66
மனித நேய ஜனநாயக கட்சிக்கு புனே சர்வதேச அமைதி பல்கலைக்கழகம் விருது !
புனேவில் உள்ள சர்வதேச அமைதி பல்கலைக்கழகத்தின் சார்பில் பல்வேறு துறைகளில் சாதித்த நிறுவங்கள் தொண்டு அமைப்புகள், அரசியல் கட்சிகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அதன் அடிப்படையில் எளிய மக்களுக்கான அரசியல் முன்னெடுத்து வரும் தமிழகத்தின் மனித நேய ஜனநாயக கட்சிக்கு விருது வழங்கப்பட்டது.
இதனை அக்கட்சியின் பொது செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி பெற்றுக் கொண்டார்.
பின்னர் இது குறித்து பேசிய அவர், பெரியார்,வள்ளுவர் ஆகியோர் தமிழர்களின் வழிகாட்டியெனவும், அவர்களின் வழியிலே மனித நேய ஜனநாயக கட்சி செயல்படுவதாக தெரிவித்தார்.