Home » டெல்லியில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் சீமான் கண்டனம்…!

டெல்லியில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் சீமான் கண்டனம்…!

by admin
0 comment

டெல்லியில் ஏற்பட்ட இசுலாமியர்களுக்கு எதிரான மதக்கலவரம் ஒட்டுமொத்த நாட்டிற்கே ஏற்பட்டத் தலைகுனிவு என்றும் ஊடகவியலாளர்கள் மீதும் திட்டமிட்டத் தாக்குதல் சாட்சியங்களின்றி கலவரம் செய்வதற்கான சதிசெயல் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியத்தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள மதக்கலவரமும், இசுலாமியர்களுக்கு எதிரானத் தொடர் தாக்குதல்களும் அதிர்ச்சியளிக்கின்றன.

குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடு முழுமைக்கும் நடைபெற்று வரும் போராட்டங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு போராடுவோர் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு கோரத்தாக்குதல் நிகழ்த்தப்படுவதும், போராட்டக்களங்கள் வன்முறைக்களங்களாக மாற்றப்பட்டு ஆளும் வர்க்கத்தின் துணையோடு மதரீதியாக நாட்டைத் துண்டாடும் முயற்சிகள் நடப்பதும் வன்மையானக் கண்டனத்திற்குரியது. இவையாவும் இந்திய அரசியலமைப்புச்சாசனத்தின் அடிநாதமான மதச்சார்பின்மை எனும் மகத்தானக் கோட்பாட்டினை சிதைத்தழித்து, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் இந்நாட்டின் பன்முகத்தன்மையையைத் தகர்த்து ஒற்றைமயமாக்கும் எதேச்சதிகாரப்போக்காகும்.

டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெறக்கோரி நிகழ்ந்த போராட்டம் திட்டமிட்டு வன்முறைக்களமாக மாற்றப்பட்டு இசுலாமியர்களும், ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டிருப்பது அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்! இதில் தர்கா தீ வைத்து எரிக்கப்படுவதைப் படம்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் தம்பி அரவிந்த் குணசேகர் கடுமையாக தாக்கப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. அவரோடு மேலும் சில பத்திரிக்கையாளர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிருப்பதாக செய்திகள் வருகிறது. அவர்கள் அனைவரும் விரைவில் மீண்டுவர வேண்டுமென எனது விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter