Home » NRCஐ அமல்படுத்தமாட்டோம் – பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் !

NRCஐ அமல்படுத்தமாட்டோம் – பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் !

0 comment

கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படுவது இந்திய மதச்சார்பின்மைக்கு எதிரானது என கூறி பல்வேறு தரப்பிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல, தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிவற்றிற்கும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பல மாநில அரசுகளும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த சட்டத்திற்கு எதிராக சில மாநிலங்கள் தங்களது சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளன. அந்த வகையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என பீகார் அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பீகார் சட்டமன்ற கூட்டத்தில், தேசிய குடிமக்களின் பதிவேட்டை (என்.ஆர்.சி) செயல்படுத்தக்கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்.பி.ஆர்) அதன் 2010 வடிவத்திலேயே செயல்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter