மத்தியில் ஆளும் பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த சட்டத்திற்கு அரசியல் எதிர்கட்சிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அமைதியாக போராடிக்கொண்டிருந்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைய தொடங்கியது. டெல்லி ஷாஹீன் பாக் போன்று தமிழகத்திலும் தொடர் முழக்கப் போராட்டங்கள் ஒவ்வொரு ஊர்களிலும் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து நேற்று டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது கொடுங்கோலர்கள் தாக்குதல் நடத்தியதில் பலத்தரப்பட்ட மக்களும் காயமுற்றனர். இந்த கொடூரமான தாக்குதலுக்கு முஹம்மது ஃபுர்கான் எனும் இஸ்லாமியர் வீதியிலேயே துடிதுடித்து பலியானார்.
இந்நிலையில் இக்கொடூர தாக்குதலை கண்டித்துஅதிரை அடுத்த மதுக்கூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிறுவர், சிறுமியர்கள் தங்ககளது கையில் ரத்தக் கரைகளுடன் கட்டு போட்ட மாதிரியாக டெல்லியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கண்டன கோஷங்களை எழுப்பினர். தள்ளாத வயதிலும் இந்த தொடர் கண்டன போராட்டத்தில் முதியவர்கள் கலந்துக் கொண்டு தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.