டெல்லியில் நடந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக பெற்ற படு தோல்வி ஆழமாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று!பாஜக வென்றால் அவர்களது ஊதுகுழல் ஊடகங்களும்,பாஜக ஆதரவாளர்களும் எதிர்தரப்பின் சதவீத கணக்கை கண்டு கொள்ள மாட்டார்கள்.ஆனால் பாஜக தோற்றுப்போய் விட்டால் சதவீத கணக்கை வலுக்கட்டாயமாக அலசி தோண்டி எடுப்பார்கள்.இங்கே டெல்லி தேர்தலில் நாம் அத்தகைய முட்டாளாக ஆகி விடக் கூடாது.காங்கிரஸூக்குத் தான் தோல்வி பாஜக பரவாயில்லை என்று பேசுவது கடுகில் கால் மாகாணி அளவு கூட சரியானதல்ல.காங்கிரஸ்க்கு கேவலமான பின்னடைவே தவிர பாஜகவுக்கு படுதோல்வி என்று தான் பார்க்க வேண்டும்.பிரதமர், சர்வசக்திமிக்க உள்துறை அமைச்சர், உத்தரபிரதேசம் போன்ற பெரிய மாநில முதல்வர் உட்பட ஏழு மாநில முதல்வர்கள், முந்நூறு பாராளுமன்ற உறுப்பினர்கள், கடுமையான தேசபக்தி பரப்புரைகள், வாரி இறைக்கப்பட்ட கரன்ஸி செலவுகளாய்..முடுக்கி விடப்பட்ட அரசு இயந்திரம் இத்தனை இருந்தும்,எதிர்தரப்பு காங்கிரஸ் பலவீனப்பட்டிருந்தும் கூட ஒற்றை இலக்கத்தை பாஜகவால் தாண்ட முடியவில்லைஎன்பதே தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடம்!இது அக்கட்சிக்கு படுதோல்வி என்பதை மறைக்க சதவீத கணக்கால் நம்மை மந்திரிக்க நினைப்பார்கள் அதற்கு பலியாகி விட தேவையில்லை!காங்கிரஸ் கட்சி தனது வேர்களுக்கு வலுவூட்டும் விதமாக பல்வேறு நல்ல முடிவுகளை எடுத்து வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளத்தை விட கூடுதலாக இடங்களில் வென்றிருந்த போதும் பாஜகவின் வியூகத்தை உடைக்க குமாரசாமியை முதலமைச்சராக்கியது
(சித்து பிரமை பிடித்த சித்தராமையா மட்டும் சற்று அமைதியாக இருந்திருந்தால் அங்கு பாஜக ஐந்து வருடமும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்)
அதே போன்று தான் தற்போதைய டெல்லி தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சமயோசிதமாக செயல்பட்டார்கள்.குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான களத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி மீது நாடெங்கும் ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.அந்த ஈர்ப்பு செயல்படத் துவங்கி கணிசமான இஸ்லாமிய மக்கள் டெல்லியில் காங்கிரஸை ஆதரிக்க முன்வந்தால் வாக்குகள் பிரியும் நிலை வரும்,காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பாஜகவை வீழ்த்தும் அளவு தற்போது வலுவாக இல்லை.எனவே வாக்குகளை பிரிப்பது பாஜகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று கணித்து பிரசாந்த் பூஷனோடு புரிதலில் உள்ள கபில்சிபல், ஆனந்த் சர்மா மற்றும் ப.சிதம்பரம் போன்றவர்கள் மறைமுகமாக இயங்கி காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் கடுமையாக களப்பணி ஆற்றுவதையும், ஏன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றவர்களே பரபரப்பாக இயங்காமல் அடக்கி வாசிக்கச் செய்து வாக்குகளை ஆம் ஆத்மிக்கு ஒருமுகப்படுத்தி திருப்பி விடும் பணியை திருத்தமாகச் செய்தார்கள்.அதனால் தான் டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து சிதம்பரம் சிலாகித்து, மெய்சிலிர்க்க ட்வீட் செய்தார் என்பதை புரிந்து தெளிய வேண்டும்.அப்படி என்றால் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டு விட்டது என்று பேசுவதும் பால் குடி மறவா குழந்தைகள் பேசும் அரசியல் ஞானமற்ற வாதமாகும்..
சமீபத்திய மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் காங்கிரஸின் ராஜதந்திர கூட்டணி ஆளும் பாஜகவின் பதினாறு அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்களை வீழ்த்தி காட்டியது.ஹரியானாவில் Neck to neck என்று பாஜகவை மிரட்டியது.ஜார்க்கண்டில் அபார வெற்றி பெற்றது
எனவே காங்கிரஸ் கதை முடிந்தது என்பது ஊனமான வாதம்.
டெல்லியில் முதன்முதலில் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தது.அதே போன்று தான் தற்போதைய காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவுகளும் சாணக்கியத் தனம் மிகுந்தவை என்பது உண்மை.ஓக்லா 81.64சதவீதம்
மாதியமஹல்-76.05 சதவீதம்
சாந்தினிசவுக்-66.94 சதவீத ம்
பாபர்பூர்-65.26சதவீதம்
பல்லிமாரன்-64.65 சதவீதம்
சீலம்பூர்-56.01சதவீதம்
முஸ்தஃபாபாத்-53.47 சதவீதம்
இஸ்லாமிய பகுதிகளில் ஆம் ஆத்மி பெற்ற வாக்குகள் இவை
எனவே காங்கிரஸ் கட்சி நாட்டின் நலனுக்காக எடுத்த ராஜதந்திர முடிவுகள் மெச்சத்தக்கவை.எல்லாம் சரி தான் கெஜ்ரிவால் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்துநடைபெற்று வரும் போராட்டத்துக்கு ஆதரவு தரவில்லையே என்று சிலர் கூறுகின்றனர்.ஆனால் டெல்லி ஷஹீன்பாக் பின்னணியில் கெஜ்ரிவால் தான் இருக்கிறார்.மூத்த தலைவர் அமானுல்லாகான் மூலமாக அதை இயக்குகிறார் என்று பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
டெல்லியில் வென்றது காங்கிரஸ்தான் !
41