கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரை பிரிலியண்ட் பள்ளி கூடத்தில் இருந்து கல்வி சுற்றுலாவாக அமெரிக்காவில் உள்ள நாசா (NASA) விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர்.
அவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் வழியனுப்பிய செய்தியை நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணைய தளம் வெளியிட்டது.
இந்நிலையில் அங்கு சென்ற மாணவர்கள் அங்குள்ள அரிய நுட்பங்களை படம் பிடித்து நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் வெளியிட அனுப்பியுள்ளனர்.
மேலும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அங்கு நடைபெற உள்ள ஆய்வு கண்காட்சியை நமது தளத்தில் வெளியிட காணொளி காட்சியாக தொகுத்து வழங்க உள்ளதாக அங்குள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.