74
அதிராம்பட்டினத்தில் குடியுரிமை சட்ட திருத்தந்தை கண்டித்து நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் தமுமுகவின் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார்.
முன்னதாக அதிரை தமுமுக கிளை அலுவலத்திற்கு வருகை தந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய ஜவாஹிருல்லாஹ், இராமநாதபுரத்தில் பேசிய முதல்வர் அவர்கள், குடியுரிமை சட்டம் தொடர்பாக இஸ்லாமியர்களுக்கு அம்மாவின் அரசு அரணாக இருக்கும் என கூறினார்.
இதனை மெய்பிக்கும் வகையில், விரைவில் கூட்ட உள்ள சட்ட மன்ற கூட்ட தொடரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என ஜவாஹிருல்லாஹ் கூறினார்.