அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் பிப்ரவரி மாத மாதாந்திர கூட்டம் அதன் அலுவலகத்தில் கடந்த 29-02-2020 சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேரா. S. பர்கத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் M.Z. அப்துல் மாலிக் கிராஅத் ஓதினார். ஒருங்கிணைப்பாளர் O.K.M. சிபகத்துல்லாஹ் வரவேற்புரை ஆற்றினார். இணைச் செயலாளர் A.S. அகமது ஜலீல் மாத அறிக்கை வாசித்தார். செயலாளர் S.A. அப்துல் ஹமீது கடிதங்கள் வாசித்தார். இணைச் செயலாளர் H. முகமது இபுராஹீம் நன்றியுரை கூறினார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.