அதிராம்பட்டினம் 21வார்டு பகுதியில் அதிகளவில்.மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பயன்படுத்தித்ய கழிவுகளை கொட்ட வழியின்றி CMPவாய்க்கால் ஓரம் கொட்டி வருகின்றனர்.
இதனை அறிந்த அதிரை சுற்றுச்சூழல் மன்றம் அப்பகுதியில் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தன.
ஆனால் மக்களின் ஒத்துழைப்பு இன்மையினால் சுகாதார பணியில் மந்த நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் அப்பகுதியில் குப்பைகள் சிதறாமல் இருக்க 15 குப்பை கூண்டுகள் அமைக்க திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி முதற்கட்டமாக அப்பகுதியில் 5 கூண்டுகள் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ஆகியவை இணைந்து அற்பனித்துள்ளனர்.
இந்த நிகச்சியில் சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், செயலாளர் சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இதிரீஸ் உள்ளிட்ட முஹல்லா வாசிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் அபூபக்கர், செயலாளர் அப்துல் காதர், துணை தலைவர் முஹைதீன் மன்சூர், இணை செயலாளர் அப்துல் ரஹீம், பொருளாளர் செய்யது அஹமது கபீர், SISYA தலைவர் அஹமது அனஸ், செயலாளர் முஹம்மது சலீம் ஆகியோர்கலந்து கொண்டனர்.
அப்போது உரையாடிய சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் பொதுமக்கள் இதற்க்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், வீட்டு பணியாளர்களிடம் குப்பையை தொட்டியில் மட்டுமே கொட்ட அறிவுரை வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.