Home » மே.வங்கத்தில் குடியேறிய அத்தனை வங்கதேசத்தவரும் இந்திய குடிமக்களே- மமதா பானர்ஜி அதிரடி !

மே.வங்கத்தில் குடியேறிய அத்தனை வங்கதேசத்தவரும் இந்திய குடிமக்களே- மமதா பானர்ஜி அதிரடி !

0 comment

மேற்கு வங்க மாநிலத்தில் குடியேறி வசிக்கும் அத்தனை வங்கதேசத்தவரும் இந்திய குடிமக்கள்தான் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டதிருத்தமான சி.ஏ.ஏ.வை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் கொல்கத்தாவில் சி.ஏ.ஏ. ஆதரவு பேரணியில் பங்கேற்றார்.

அமித்ஷாவின் வருகைக்கு எதிராக கொல்கத்தாவில் இடதுசாரிகள், அமித்ஷாவே திரும்பிப் போ என்று முழக்கம் எழுப்பி போராட்டங்களை நடத்தினர். அத்துடன் அமித்ஷா வருகைக்கு எதிராக வானில் கறுப்பு பலூன்களையும் பறக்கவிட்டனர்.

இத்தனை எதிர்ப்புகளுக்கு இடையே கொல்கத்தா பேரணியில் பேசிய அமித்ஷா, குடியுரிமை சட்ட திருத்தத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என கூறியிருந்தார்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தின் காலியாகஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது:

வங்கதேசத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் அனைவருமே இந்திய நாட்டின் குடிமக்களே. அவர்களுக்கு இந்திய குடியுரிமை இருக்கிறது. புதியதாக குடியுரிமை கோரி நீங்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

நீங்கள் இந்த நாட்டின் தேர்தல்களில் வாக்களிக்கலாம்.. இந்த தேசத்தின் பிரதமர், முதல்வரை தேர்ந்தெடுக்கலாம். சிலர் நீங்கள் இந்த தேசத்தின் குடிமக்கள் இல்லை என்று கூறுவார்கள்.. அவற்றையெல்லாம் நம்ப வேண்டாம்.

குடியுரிமை விவகாரத்தில் ஒருவரைக் கூட மேற்கு வங்கத்தில் இருந்து நாங்கள் வெளியேற்றமாட்டோம் என்பதை திட்டவட்டமாக கூறிக் கொள்கிறோம். டெல்லி வன்முறைகளை தடுக்க மோடி அரசு தவறிவிட்டது.

மேற்கு வங்கத்தை ஒருபோதும் இன்னொரு டெல்லியாக மாற்ற அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter