CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராகவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அதிரையில் ஷாஹீன் பாக் பாணியில் இன்று 16வது நாளாக தொடர் போராட்டம் அதிரை ஜாவியா ரோட்டில் நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று 16வது நாள் தொடர் போராட்டத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச்செயலாளருமான தமீமுன் அன்சாரி MLA பங்கேற்று கண்டன எழுச்சியுரை ஆற்றினார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என பலர் பங்கேற்று CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.






