CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராகவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அதிரையில் ஷாஹீன் பாக் பாணியில் இன்று 16வது நாளாக தொடர் போராட்டம் அதிரை ஜாவியா ரோட்டில் நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், அனைத்து சமுதாய மக்களின் நல்வாழ்வுக்காகவும், கொரோனா வைரஸ் போன்ற கொடூர நோய்களிலிருந்து பாதுகாப்பு வேண்டியும் இன்று ஆண்கள், பெண்கள் என பலர் நஃபிலான நோன்பு நோற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பின்னர் மாலை போராட்ட அரங்கிலேயே இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதேபோல் அதிரை கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளியிலும் நஃபிலான நோன்பு நோற்றவர்களுக்கான இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.




