குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராடுவோரை கைது செய்து அப்புறப்படுத்த வேண்டும் என நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் தரப்பு வாதத்தை நீதிமன்றம் கேட்கவில்லை என மூத்த வழக்கறிஞர்கள் நேற்று உயர்நீதிமன்ற அமர்வில் முறையிட்டனர்.
இதையடுத்து அந்த மனு இன்று அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யவேண்டும் என நேற்று பிறப்பித்த உத்தரவை வரும் 11ம் தேதி வரை நிறுத்திவைத்து உத்தரவிட்டனர்.