165
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் நலக் குறைவால் கடந்த பிப்ரவரி மாதம் 24 ம் தேதியனறு சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணியளவில் சளி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்.
திருவாரூர் மாவட்டம் காட்டூர் என்கிற கிராமத்தில் 1922 ம் ஆண்டு பிறந்த க.அன்பழகன், 43 ஆண்டுகாலம் திமுகவில் பொதுச் செயளாலராக இருந்து வந்தார்.
அவருடைய மறைவையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், பேராசிரியர் க.அன்பழகன் மறைவிற்கு திமுக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என்றும், திமுக கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்