Home » பரவும் கொரோனா : கேரளாவில் 15.. பெங்களூரில் 4.. இந்தியாவில் 55 பேருக்கு வைரஸ் பாதிப்பு !

பரவும் கொரோனா : கேரளாவில் 15.. பெங்களூரில் 4.. இந்தியாவில் 55 பேருக்கு வைரஸ் பாதிப்பு !

0 comment

கொரோனா வைரஸ் முன்பை விட இப்போது 17% கூடுதல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா சீனாவில் மட்டும் கொஞ்சம் வேகம் குறைந்துள்ளது. உலகம் முழுக்க 114,422 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.உலகம் முழுக்க 4,027 கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

சீனாவில் 80,754 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். சீனாவில் 3,136 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

சீனாவில் இந்த வைரஸ் பரவும் வேகம் கொஞ்சம் குறைந்துள்ளது. முன்பை விட சீனாவில் தற்போது வைரஸ் கொஞ்சம் மெதுவாக பரவி வருகிறது.

இந்தியாவில், கேரளாவில் நேற்று முதல் நாள் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. பத்தனம்திட்டாவில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. 5 பேரில் 3 பேர் இத்தாலியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் உறவினர்கள் 2 பேருக்கு வைரஸ் தாக்கியது. ஏற்கனவே கேரளாவில் மூன்று பேருக்கு வைரஸ் தாக்கி குணப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் கேரளாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பத்தினம்திட்டாவில் 2 பேருக்கும், கோட்டயத்தில் 4 பேருக்கும் வைரஸ் தாக்கியுள்ளது. இதன் மூலம் கேரளாவில் குணப்படுத்தப்பட்ட 3 பேரோடு சேர்த்து 15 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எல்லோரும் தனியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதேபோல் இன்று புதிதாக புனேவில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இரண்டு பேரும் துபாய் சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மஹாராஷ்டிராவில் இதன் மூலம் முதல் முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

புதிய 3 கொரோனா பாதித்தவர்களும் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் முதல் நபர் ஒருவருக்கு நேற்று கொரோனா பரவி உள்ளது. இவருக்கு ஓமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பின் கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்.இவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter