அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற காஸ் நுகர்வோர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் நுகர்வோர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டன.
அதில் காஸ் சிலிண்டர்கள் கொண்டுவரும் ஊழியர்களுக்கு பில் தொகையை மட்டுமே செலுத்தினால் போதுமானது என்றும், இந்த பிரச்சனைகளை தீர்க்க ஆன்லைன் மூலமாக பதிவு செய்பவர்கள், அதன் மூலமே கட்டணத்தை செலுத்துவதால் இப்பிரச்சினை எழாது என்றார் பாலு இண்டென் காஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. பாலு அவர்கள்.
மேலும் கூறிய அவர், கியாஸ் சிலிண்டர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த விரைவில் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் முகாம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் அபூபக்கர், செயலாளர் செய்யது அஹமது கபீர், சிஸ்யா தலைவர் அனஸ், கிஜார், சேக்தம்பி, உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.





