தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை துவங்கியதும் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், NPR கணக்கெடுப்பு தமிழகத்தில் நடத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மத்திய அரசு கொண்டு வந்து உள்ள சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் போட முடியாது. அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தமிழக அரசு NPR ,NRC குறித்து தீர்மானம் நிறைவேற்றாது. மக்களை ஏமாற்றும் விதத்தில் தீர்மானம் நிறைவேற்றி பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க முடியாது. NPR கணக்கெடுப்பு ஏப்ரலில் துவங்கும். மத்திய அரசை கண்டித்து தீர்மானம் போட வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.
இதை கண்டித்து திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி, NPR க்கு எதிராக அரசு தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து பேரவை வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டார்.
கேரளா, புதுச்சேரி, ராஜஸ்தான், பஞ்சாபி என 7 மாநில அரசுகள் மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் போட்டு உள்ள போது தமிழக அரசு மக்களை ஏமாற்றும் நோக்கில் செயல் பட்டு வருகிறது. இதற்கான விளைவை விரைவில் அதிமுக அரசு சந்திக்கும் என போராடும் மக்கள் கூறியுள்ளனர்.