Home » அதிரை ஜமாலியன் அலுமினி அசோசியேசன் துவக்க விழா!

அதிரை ஜமாலியன் அலுமினி அசோசியேசன் துவக்க விழா!

by
0 comment

திருச்சியில் புகழ்பெற்ற ஜமால் முஹம்மது கல்லூரியில் ஏராளமான அதிரையர்கள் கல்வி பயின்று பல்வேறு நாடுகளில் நல்ல தகுதிகளில் பணியாற்றி வருகின்றனர், குறிப்பாக அதிராம்பட்டினம் நகரில் இருந்து இக்கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் பயின்று உள்ளார்கள் என்பது தனி சிறப்பு.

இதே போல் பல்வேறு ஊர்களிலில் இருந்தும் அக்கல்லூரியில் பயின்ற மாணவர்களால் அந்தந்த ஊர்களில் முன்னாள் மாணவர்கள் சங்கம் அமைத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நாளைய தினம் ரிச்வே கார்டனில் அதிரை ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் உதயமாகிறது.

இதற்கான முன்னேற்றப்பாடுகளை கல்லூரியின் முன்னாள் மாணவரான கஜ்ஜாலி முஹம்மது ஒருங்கிணைத்து வருகிறார்.

இதன் சிறப்பு அழைப்பாளராக ஜமால் முஹம்மது கல்லூரியின் தாளாளர் காஜா நஜ்முதீன் கலந்துகொண்டு அலுமினி அசோசியேசனை துவக்கி வைக்கிறார்.

இந்த சிறப்புமிக்க விழாவில் அதிரையின் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கொளரவிக்க உள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது.

எனவே ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் யாவரும் இந்த விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பிக்க அழைக்கப் படுகிறார்கள்.

மேலும் இக்கல்லூரியில்  பயின்ற அதிரையர்கள் நாடுகடந்து வாழ்ந்தாலும் பின்வரும் மொபைல் எண்ணுக்கு தொடர்புகொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என சங்க ஒருங்கிணைப்பாளர் கஜ்ஜாலி, மற்றும் சங்க ஆலோசகர் ரஃபியா ஆகியோர் கேட்டு கொண்டனர்.

+919994488957

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter