தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15.10.2017) மாபெரும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி Dr.A.P.J அப்துல் கலாம் அவர்களின் 86 -வது பிறந்த நாளை நினைவு கூறும் விதமாக அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் பொருட்டு புத்தக கண்காட்சியும் நடைபெற்றது.
இக்கண்காட்சியில் ஈஸ்ட் கோஸ்ட் அகாடெமி சிபிஎஸ்இ பள்ளியின் முதல்வர் திருமதி T.V.ரேவதி அவர்கள் மற்றும் இமாம் ஷாஃபி பள்ளியின் முதல்வர் திருமதி A. மீனா குமாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் O.K.M. சிபாகத்துல்லா அவர்களும், இணை செயலாளர் M.F.முஹம்மது சலீம் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
அறிவியல் கண்காட்சிக்கு நடுவர்களாக காதிர் மொய்தீன் கல்லூரியின் பேராசிரியர்கள் திரு.D.r. ஃபாரூக், திரு ராஜா முஹம்மது, திருமதி Dr. ஆயிஷா மரியம், செல்வி S. அபிநயா பொறுப்பேற்று சிறந்த படைப்புகளை தேர்தெடுத்தனர்.
பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் திரு.பார்த்த சாரதி, திரு. கார்த்திகேயன், திரு.முஹம்மத் இத்ரிஸ், திரு.சத்திய சீலன் , திருமதி. கமலக்கண்ணி ஆகியோரும் மற்றும் இருபால் ஆசிரிய பெருமக்களும் ஒருங்கிணைந்து இந்த அறிவியல் மற்றும் புத்தக கண்காட்சியை சிறப்பான முறையில் நடத்தி முடித்தனர்.
பள்ளியின் மாணவர்களும் தங்களுடைய ஆற்றல் திறன் மற்றும் சிந்தனைத் திறனை செயல் வடிவில் சிறப்பான முறையில் வெளிப்படுத்தினர். நூற்றுக்கணக்கான பெற்றோர்களும் கண்காட்சியை பார்வையிட்டு கண்டுகளித்தனர்.