அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று, கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக கைத்தரித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்நிலையில் CAA விற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த நிலையில், அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நூற்றாண்டு விழா நடைபெறும் காதிர் முகைதீன் கல்லூரி முன்பு ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சர் ஓ.எஸ். மணியனை வெளியேறக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் கல்லூரி விழாவை பங்கேற்றுவிட்டு அமைச்சர் ஓ.எஸ். மணியன் விரைவாக கல்லூரியைவிட்டு வெளியேறினார். இதனையடுத்து பொதுமக்கள், அமைச்சரை அழைத்த கல்லூரியை கடுமையாக கண்டித்தனர்.
இதனால் கல்லூரி நிர்வாகம் தரப்பில், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் களைந்து சென்றனர். இதனால் ஈசிஆர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





