Home » தேனி மாவட்டம் கம்பத்தில் கொரோனாவா? : உண்மை நிலவரம் தான் என்ன??

தேனி மாவட்டம் கம்பத்தில் கொரோனாவா? : உண்மை நிலவரம் தான் என்ன??

0 comment

சீனாவில் முளைத்த கொரோனா என்கிற கொடிய உயிர் கொல்லி நோய் தற்போது உலகாளவிய அனைத்து நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை பாதுக்கப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் இருமல் காய்ச்சல், தும்மலுடன் வந்த மெயின் பஜார் தெருவை சேர்ந்த மைதீன் என்பவரது மனைவி யாஸ்மின் பேகம் வயது 47.

இவருக்கு தொடர் சளி, இருமல் காரணமாக கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த இவரை மருத்துவர்கள் கொரோனாவாக இருக்கக் கூடும் என்று இவரை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

மேலும் அருகில் இருந்த மற்ற நோயாளிகள் கொரோனா வைரஸாக இருக்கக் கூடும் என்று நினைத்து உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியே வந்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக தேனி மாவட்ட தலைமை அரசு மருத்துவருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதன் பின்னர் மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்றும் மாறாக எலும்புருக்கி எனப்படும் காச நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கம்பம் நகரமே பரபரப்புக்கு உள்ளானது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter