அதிராம்பட்டினம் ரிச்வே கார்டனில் நடைபெற்ற திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் அலுமினி அசோசியேசன் துவக்க விழா, அய்டா முன்னாள் தலைவர் ரஃபியா தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஜமால் முஹம்மது கல்லூரியின் தாளாளர் காஜா நஜ்முதீன் கலந்துக்கொண்டு மாணவர்கள் சங்க இலட்சினையை துவக்கி வைத்து பேசினார். அப்போது பல்வேறு நாடுகளில் பறந்துவிரிந்த ஜமாலியன் அசோசியேசன் அதிரையிலும் துவக்கி உள்ளது உண்மையில் மனநிறைவு தருகிறது என்றார்.
மேலும் இந்த சங்கத்தின் வாயிலாக கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவிட முடியும் என்றும் அதற்காக ஜமால் முஹம்மது கல்லூரி எப்போதும் தயாராக உள்ளது என தெரிவித்தார்.
முன்னதாக அதிரை ஜமாலியன் அசோசியேசன் ஒருங்கிணைப்பாளர் கஜ்ஜாலி முஹமது விருந்தினர்களை வரவேற்றார்.
இந்த நிகழ்வில் ஊடகத்தில் சிறப்பாக செயலாற்றிய அதிரை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரண்டு ஊடகத்திற்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியில் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞரணியின் அனஸ், கிஜார், சமூக ஆர்வலர் அப்துல் ரஜாக்,தொழிலதிபர் ஃபதுருத்தீன்,ஊடகவியலாளர் ஹசன், சேக்கனா நிஜாம், அஷ்ரஃப் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
இறுதியாக சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கஜ்ஜாலி கூறுகையில், இந்த அலுமினி அஷோசியேசனில் முன்னாள் இந்நாள் மாணவர்கள் இணைந்து நல்லபல காரியங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் தானாகவே முன்வந்து இந்த சங்கத்தில் இணைந்து ஒற்றுமையாக செயலாற்ற வேண்டுகோள் விடுத்துள்ளார்.








