NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் அமல்படுத்தகூடாது என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று 18ம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் பட்டுக்கோட்டையில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை போஸ்ட் ஆபீஸ் சாலை எதிரே நடைபெற்ற இப்போராட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை ராஜிக் தலைமை தாங்கினார்.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைமைக்கழக பேச்சாளர் அப்துல் ஜப்பார் பங்கேற்று கண்டன உரை ஆற்றினார். பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அதிராம்பட்டினம், ஒரத்தநாடு என பல ஊர்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என இராண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக போராட்டக்காரர்கள் யாரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இறுதியாக NRC, NPR க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பி போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.







