சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்பத்தி வரும் நிலையில். உலக நாடுகளில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.இதனை பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.அதே போல் தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.இதில் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி நடுவிக்காடு 4 மற்றும் 5 வார்டுகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்று (18-03-2020) நடைபெற்றது.இதே போல் மழவேனீற்க்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுவிக்காடு மற்றும் மிலாரிக்காடு பகுதிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.
கொரோனா எதிரொலி: புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்..
197
previous post