அதிரையின் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக கட்டுமானத்துறை விளங்குகிறது. மேலும் வட மாநிலங்களை சேர்ந்த பலரும் அதிரையில் கட்டுமான தொழிலை நம்பியுள்ளனர். இதனால் வாரத்தில் 7 நாட்களும் கட்டுமான நிறுவனங்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் நாளையதினம் தேசிய அளவில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட இருப்பதால் கட்டுமான நிறுவனங்களும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.
இதுகுறித்து ஆமினாஸ் கன்ஸ்ட்ரக்சன் நிறுவன இயக்குநரும் பொறியாளருமான அபூபக்கர் கூறுகையில், கோரோனா என்பது சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதன் காரணமாக நாளையத்தினம் ஆமினாஸ் நிறுவனம் கட்டுமான பணியை மேற்கொள்ளாது என்றார்.
இந்நிலையில் ஆப்பிள் இப்ராகிம் கூறுகையில், சுற்றுவட்டார கிராம மக்கள் வேலைக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் நாளையத்தினம் தாங்கள் கட்டுமான பணியை மேற்கொள்ளபோவதில்லை என்றார்.
இதேபோல் நாளையத்தினம் அதிரையில் இயங்க கூடிய பல கட்டுமான நிறுவனங்களும் விடுமுறை அளிக்க திட்டமிட்டுள்ளன.