தமிழகத்தில் நாளை திங்கட்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பிரதமர் மோடி அறிவித்த நிலையில் கொரோனா நோய் பரவுவதை தடுக்க இன்று (22-03-2020) காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன் வந்து மேற்கொண்ட ஊரடங்கு நிகழ்வு பல்வேறு தரப்பு மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இரவு 9 மணிக்கு நிறைவுற உள்ளது. இந்த ஊரடங்கு நிகழ்வு மக்களின் நலன் கருதி நாளை 23-03-2020 களை 5 மணிவரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதியவசியப்பணிகள் தொடர்ந்து நடைபெற எந்த தடையும் இல்லை என தெளிவுபடுத்தப்படுகிறது. இத்தொடர் ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்