தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணியில் அலுவலக அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை முன்னாள் பேரூராட்சி தலைவர் N.அசோக் குமார் வழங்கினார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு, பாதுகாப்பு உபகரணங்களை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தாலுகாவில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு சானிடைசர்,முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை திமுகவின் நிர்வாகியும், பேராவூரணி பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் N.அசோக் குமார் வழங்கி முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.