அதிரையை அடுத்த ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசாளும் வர்க்கத்தால் செய்து கொடுக்கப்பட வில்லை. குறிப்பாக குப்பைகளை கூட முறையாக அள்ளுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காததால் பிலால் நகர் இளைஞர்களே களத்தில் இறங்கிவிட்டனர்.
முதற்கட்டமாக தெருக்களில் தேங்கி கிடந்த குப்பைகளை இளைஞர்கள் தன்னார்வத்துடன் அகற்றி தீயிட்டு கொளுத்தினர்.
சமீப காலமாக அதிரை இளைஞர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுவதால் துப்புரவு பணியாளர்கள் முறையாக ஏன் பணி செய்ய வில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறி உள்ளது.