தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் SDPI கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது.நகரத்தலைவர் அப்துல் பகத் முன்னிலை வகித்தார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் மல்லிப்பட்டிணத்தில் தடுக்கும் வண்ணம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊருக்கு வருபவர்கள் கைகளை சுத்தமாக கழுவி உள்ளே வருவதற்குண்டான ஏற்பாடுகளை SDPI கட்சி சார்பில் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் சுகாதர துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டு கொரோனா குறித்தான தகவல்களையும்,எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற விவரங்களையும் பொதுமக்களுக்கு எடுத்து கூறினர்.
இதில் கிராம நிர்வாக அலுவலர்,மருத்துவர் ஜியாவுர் ரஹ்மான்,ஜமாஅத் தலைவர் கமருதீன்,SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் அஸ்கர் மற்றும் நிர்வாகிகள்,செயல்வீரர்கள் கலந்துக்கொண்டனர்.
இறுதியாக நகரச்செயலாளர் ஜவாஹீர் நன்றியுரை ஆற்றினார்.