Home » அதிரையில் நாளை முதல் தொழுகை நேரங்களில் மாற்றம் !(முழு விவரம்)

அதிரையில் நாளை முதல் தொழுகை நேரங்களில் மாற்றம் !(முழு விவரம்)

0 comment

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிரை அனைத்து முஹல்லா மற்றும் அனைத்து உலமாக்கள் பங்கேற்ற முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளியில் நடைபெற்றது.

இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை,

நாளை முதல் அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் ஐந்து வேலை தொழுகையும் பாங்கு சொல்லப்பட்டு அடுத்த 10 நிமிடத்தில் தொழுகை நடைபெறும்.

பள்ளிவாசல்களுக்கு அருகில் இருப்போர் பள்ளிக்கு சென்று ஜமாஅத்தாக தொழுது கொள்ளவும். தூரத்தில் இருப்போர், வயோதிகர்கள் மற்றும் சிறார்கள் பள்ளிக்கு வருவதை தவிர்த்து கொள்வது சிறந்தது

வருகின்ற வார ஜும்மா தொழுகையானது 12:30 மணிக்கு பாங்கு சொல்லப்பட்டு 12:40 ஜுமுஆ (நேரடியாக) தமிழ் பயான் இல்லாமல் தொழுகை நடத்தப்படும்.

முக்கியமாக பள்ளி வாசல்களில் வீண் கூட்டங்களை தவிர்த்து கொள்ளவுமாறும் அனைத்து முஹல்லா சார்பில் கேட்டு கொண்டுள்ளனர்.

ஜுமுஆ குறித்து (அன்றைய நிலைமையை கருத்தில் கொண்டு) வியாழன் அன்று உறுதி செய்யப்படும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter