தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருவாரூரை சேர்ந்த கரு குடும்பத்தினர், திண்டுக்கல்லில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திருவாரூர் திரும்பியுள்ளனர்.
இன்று இரவு 9.30 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே வேன் வந்துகொண்டிருந்த நிலையில், எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அதிராம்பட்டினம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த முத்து என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த 10 பேர் தமுமுக மற்றும் TNTJ ஆம்புலன்ஸ்கள் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மிகவும் மோசமான நிலையில் இருந்த சண்முக சுந்தரம் என்பவர், மேல்சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த கோர விபத்தினால், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சற்றுமுன் 11 மணியளவில் கிடைத்த தகவலின்படி, பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.















