தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் கடற்கரையில் 144 தடை உத்தரவை மீறி 5ககும் மேற்பட்டோர் கூட்டமாக நின்று மீன் வியாபாரம்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவி வரும் சூழலில் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. அதனடிப்படையில் நேற்று(25.3.20) மாலையில் இருந்து 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்து இருக்கிறது.இந்த உத்தரவில் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்து இருக்கும் என்ற உத்தரவையும் அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் மீன்கடைகள் திறக்க அரசு அனுமதித்த போதும் சில விதிமுறைகள் விதித்து இருக்கிறது.ஆனால் அந்த உத்தரவை மீறும் வண்ணம் பலர் ஒன்று கூடி மீன் வியாபரத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
அரசு வகுத்த உத்தரவை சரிவர பின்பற்றிட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

