தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அனைத்து பள்ளிகளின் தொழுகை நடைமுறையை அறிவித்துள்ளனர்.
அதன்படி, நாளை 26/03/2020 முதல் அனைத்து பள்ளிவாயில்களிலும் ஐவேலை தொழுகையின் பாங்கு மட்டும் ஒலிபெருக்கியில் சொல்லப்படும்
பாங்கில் அஸ்ஸலாத்து பீ புயூத்திகும் என்ற வாசகம் சேர்த்து சொல்லப்படும்
பொதுமக்கள் யாரும் தொழுகைக்கு பள்ளிக்கு வரவேண்டாம் என்றும், வீட்டிலேயே தொழுதுக்கொள்ளுமாறும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்
வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகை ரத்து செய்யப்பட்டு லுஹர் தொழுகையாக வீட்டில் தொழுதுக்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள்
கூட்டம் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளையும் மறுஅறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது
நமதூருக்கு வெளியூர் மற்றும் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்கள் தாங்களாக முன்வந்து அவர்களை சுயமாக 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்
மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் 144 தடை உத்தரவு நீங்கும் வரை தற்காலிகமானது
- கூத்தாநல்லூர் ஜமாத்தார்கள்