கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் ஜமாத்தாக தொழுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என மாநில உலமா சபை அறிவித்திருந்தது.
அதனடிப்படையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும், நோயாளிகளும் ஆரோக்கியமானவர்களும் ஒன்று சேர வேண்டாம் என்ற நபிமொழியின் அடிப்படையிலும், தமிழக அரசின் 144 தடை உத்தரவை பின்பற்றும் விதமாகவும் கிருஷ்ணாஜிப்பட்டினம் பள்ளிவாசல்களில் பாங்கு மட்டும் சொல்லப்படும்.
ஜமாஅத்தாக தொழுகை பள்ளியில் நடைபெறாது என்பதை அறிவித்து கொள்கின்றோம்.
மேலும் ஜூம்ஆ தொழுகை அவரவர் வீடுகளில் லுஹர் தொழுகையாக (நான்கு ரக்அத்துகளாக) நிய்யத் செய்து தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த நடைமுறை மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.
◆. முஸ்லீம் ஜமாஅத், கிருஷ்ணாஜிப்பட்டினம்