பெங்களூருவில் 115 ஆண்டுகளுக்கிடையே இல்லாத வரலாறு காணாத மழை பெய்துள்ளது. பெங்களூருவில் கடந்த 2 மாதங்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்துவருகிறது.மழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கர்நாடகத்தின் உள் மாவட்டங்களிலும், பெங்களூரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை தொடரும் என கர்நாடக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் 16.15 செ.மீ. அளவுக்கு மழை கனமழை பெய்தது. இதில் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், பெங்களூரு நகரம் இருளில் மூழ்கியதுடன், போக்குவரத்தும் முடங்கியது.மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.