Home » அதிரை முஸ்லீம்கள் மீது வெறுப்புணர்வை விதைக்கும் மாலைமலர்!

அதிரை முஸ்லீம்கள் மீது வெறுப்புணர்வை விதைக்கும் மாலைமலர்!

0 comment

தமிழகத்தில் ஏற்பட்டிருக்க கூடிய கொரோனா பாதிப்புக்கு முஸ்லீம், கிருஸ்துவர்கள் தான் காரணம் என்ற ரீதியில் சில விஷமிகள் மனிதம் மறந்து மிருகமாய் வதந்திகளை பரப்பி வரும் சூழலில், முன்னணி ஊடகங்களும் அதற்கு இசைவு தெரிவிப்பதைபோல் செயல்படுவது பொதுமக்களை விரக்தியடைய செய்துள்ளது. இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் 12 மத போதகர்கள் உள்பட 107 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு என்ற தலைப்பில் முஸ்லீம் ஜமாத்தினரை குறிவைத்து மாலைமலர் செய்தி வெளியிட்டிருக்கிறது. சாலையோர வியாபாரி முதல் இங்கிலாந்தின் பிரதமர் வரை கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கும் சூழலில் தமிழ் முன்னணி ஊடகங்கள் மத அடையாளங்களை பயன்படுத்தி செய்தி வெளியிடுவது அமைதியான சமூகத்தில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மாலைமலர் நிர்வாகம் தான் செய்த பொறுப்பற்ற செயலை உணர்ந்து மன்னிப்பு கோர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாலைமலர் தொலைபேசி எண்: 04362 235361, 044 25321 067, 8754422764.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter