தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் சேதுரோட்டை சேர்ந்த இளைஞர் காலித் அகமது சென்னை எஸ்.டி.பீட்டர்ஸ் பல்கலைக் கழகத்தில்பொறியியல் இறுதி ஆண்டு மாணவர். உறவுகள் அறக்கட்டளை என்ற தொண்டு அமைப்பின் மூலம் தன்னார்வலர்களை இணைத்துக்கொண்டு பொதுநல சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
அறக்கட்டளை சேவை அமைப்பின் சமூகத் தொண்டினை பாராட்டி, உலக இளைஞர் பேரவை சார்பில், விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ அப்துல் கலாம் 86-வது பிறந்த தினத்தில், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரி
அரங்கில் நேற்று நடைபெற்றது சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 20 பேருக்கு டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் காலம் பொதுநல சேவை விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். அறக்கட்டளைக்கு பொதுநல சேவை விருது வழங்கப்பட்டது. அவற்றை அதன் நிறுவனர் காலித் அகமது பெற்றுக்கொண்டார்.