அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் நிர்வாககுழுவினர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அதிரைபேரூராட்சி நலன் குறித்து மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 16.10.2017 திங்கட்கிழமையன்று நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் மனு நாள் முகாமில் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்ற துணைத்தலைவர் எஸ்.முஹம்மது இப்ராஹிம், செயலாளர் எம்.எப்.முஹம்மது சலீம், துணை செயலாளர்.கே.இத்ரீஸ் அஹமது, செயற்குழு உறுப்பினர் எஸ்.அஹமது அனஸ் , தணிக்கையாளர் என்.ஷேக்தம்பி ஆகியோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அதிரைபேரூராட்சியில் டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, உணவு விடுதிகளில் பாதுகாப்பான உணவு வழங்குதல், கரையூர் தெரு, காந்திநகர், பழஞ்செட்டிதெரு பகுதிகளில் ஏடிஸ்கொசு உற்பத்தியை தடுக்கவும் டைபாய்டு, எலிகாய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவாமலிருக்கவும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி அமைக்கவேண்டியும் கோரிக்கை மனுவை அளித்தனர்.